கொழும்பு, ஜூன். 30-
இலங்கையில் இந்த ஆண்டு 12 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சலால் இதுவரை சுமார் 152 பேர் பலியாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கொழும்பு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தூய்மை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் சுகாதாரத்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க பாக்டீரியாக்களையும் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கியூபாவிலிருந்து இந்த வாரத்தில் பாக்டீரியாக்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மூல ஆவணம்: www.koodal.com/news/shownews.asp?id=41291&title=sri-lanka-to-import-bti-bacteria-from-cuba-to-control-dengue-news-in-tamil